வேட்டை

1.வேட்டை

துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பட்டு இருக்கிறதா என்று கடைசியா ஒருமுறை சரிபார்த்து கொண்டான் மாரி. இன்னிக்கு இருக்கு செம வேட்டை.

சிறிது நேரத்தில் டாடா சுமோவில் வந்து இறங்கினார் பெரியவர் கணேசன். இறங்கி சற்று தூரம் நடந்திருப்பார். மாரியின் கையிலிருந்த துப்பாக்கி முழங்கி தன் கடமையை கச்சிதமாக செய்தது.

மறுநாள், செய்திதாள்களில் இச்சம்பவம் தலைப்பு செய்தியாக வந்தது. போலீசுக்கு தண்ணி காட்டிகொண்டு இருந்த பெரியவர் கணேசன் என்கிற பிரபல தாதா, இன்ஸ்பெக்டர் மாரியால் சுட்டு கொல்லப்பட்டார்.

சதிஷ்

(28-2-2007 ஆனந்த விகடனில் வெளியான என்னுடைய முதல் சிறுகதை)

Comments